Header Ads



மீண்டும் ஜனாதிபதியாகும், கனவுடன் மைத்திரி

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு வரை மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவியில் வைக்கும் வகையில் அரசியலமைப்பில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறை இரத்து செய்தல், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தி கொள்ளல் மற்றும் 2025ஆம் ஆண்டு வரையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கி, விசேட அதிகாரங்கள் சிலவற்றையும் ஜனாதிபதிக்கு வழங்குவதற்கும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலம் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரையில் உள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பை சமர்ப்பித்து கொள்வதற்கும், அந்த அரசியலமைப்பிற்கமைய ஒரே முறையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்காமல் நடவடிக்கை சிலவற்றை மேற்கொள்ளவதற்கும் யோசனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதற்கமைய 2019ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலம் இயங்குகின்ற நிலையில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு பதிலாக புதிய முறைமையின் கீழ் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தி ஜனாதிபதியை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவிக்கு மைத்திரிபால சிறிசேனவை நியமிக்கப்பதற்கே அங்கு பிரதான கட்சிகள் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி பதவிக்கு 2020ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை விசேட அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும், 2025ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த பதவியை நாடாளுமன்றத்திற்கு வழங்கவும் இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதுவரையிலும், அவ்வாறு விசேட அதிகாரங்கள் சிலவற்றை 2025ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் சேர்ப்பதற்கு இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இணக்கப்பாட்டிற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர்.சம்பந்தனுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.