Header Ads



விரகத்தியில் விஜேதாச ராஜபக்ச

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜேதாச ராஜபக்ச, இதுவரை நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாது பதவி தானாகவே இரத்தாக இடமளித்து, ரோசி சேனாநாயக்க நாடாளுமன்றத்திற்கு செல்ல வழிவகுக்க போவதாக விஜேதாச ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.

அமைச்சர் பதவியின்றி பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினராக அமர வெட்கமாக இருப்பதாகவும் அரசியலில் இருந்து விலகி வர்த்தகத்தில் ஈடுபட போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜேதாச ராஜபக்ச அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை தொகுதியை சேர்ந்த எவரும் அவரை சந்திக்கவில்லை என்பதுடன் தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ளவில்லை.

இதன் காரணமாகவே விஜேதாச ராஜபக்ச இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பேசப்படுகிறது.

6 comments:

  1. Very good and this is beginning still you will get more problems in shaa allah

    ReplyDelete
  2. Great news for Sri Lankan

    ReplyDelete
  3. முஸ்லிம்களே அல்லாஹ்வின் சூழ்ச்சியை நீங்கள் கண்டு கொண்டீர்கள் சூழ்ச்சி செய்வதை விட்டும் நீங்கி அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  4. Business better for you get gnana Sara for partnership for your business

    ReplyDelete
  5. நோன்பில் நாம் சிந்திய கண்ணீர் இன்று உன்னை கேவலங்களால் நனைகின்றது. இந்த நாட்டில் புலி தீவிரவாதிகள் தொட்டு மஹிந்த, இன்று விஜேதாஸவரை முஸ்லிம்களுக்கு நிகழ்த்திய அநீதிகளுக்கு கேவலங்களை இறுதியில் சுமந்தவர்களாகவே அவர்கள் ஆட்டம் முடிவிற்கு வந்துள்ளது

    ReplyDelete
  6. He may be backing the Shaitan- Champika in a different way for suppressing minorities.

    ReplyDelete

Powered by Blogger.