ட்ரம்ப் அளித்த, விருந்துபசாரத்தில் மைத்ரிபால
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் எழுபத்து இரண்டாவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை முதன்முதலாகச் சந்தித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அளித்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டபோதே இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பாரியார் ஜயந்தி புஷ்பா குமாரியும் டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப்பும் உடனிருந்தனர்.
Post a Comment