பிரபாகரன் ஒரு வீரர், அவருக்கு நினைவுத்தூபி அமைப்பதில் பிரச்சினை இல்லை - ஞானசாரர்
ராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தின் மூலம் புலிகளை வெற்றி கொண்டபோதும் தமிழ் மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்வ தற்கு எந்த வேலைத்திட்டமும் அவர்களிடம் இருக்கவில்லை. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நந்திக்கடலில் பிரபாகரனுக்கு நினைவுத்தூபி அமைத்திருந்தாலும் பிரச்சினை இல்லை என்று பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனா கட்சி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மஹிந்த ராஜபக்ஷ் எடுத்த அரசியல் தீர்மானத்தை யாரும் மறக்க முடியாது. எந்த அரசியல் கொள்கையில் இருந்தாலும் நாட்டு மக்கள் அவருக்கு நன்றியுடையவராக இருக்கவேண்டும். அது வரலாற்று முக்கியத்துவமான தீர்மானமாகும். அத்துடன் சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே அவர் இந்த தீர்மானத்தை எடுத்து யுத்தத்தை வெற்றிகொள்ள தலைமைத்துவம் வகித்தார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ் வாழ்நாள் முழுவதும் இந்த நாட்டில் அரசராக இருக்கவேண்டியவர். என்றாலும் அது நடைபெறவில்லை. ஏனெனில் அவரை சுற்றியிருந்த ஆலோசகர்கள் சரியான ஆலோசனைகளை வழங்கியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அவரின் தோல்வியுடன் நாடும் நிலையான நிலைப்பாட்டில் இருந்து விழுந்துள்ளது.
விடுதலைப்புலிகளை யுத்தத்தின் மூலம் தோல்வியடையச்செய்தாலும் அவர்களால் சமூகமயமாக்கியுள்ள பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை தோற்கடிக்க முடியவில்லை. அதேபோன்று அதன் அரசியல், சர்வதேச முன்னணிகளை தோற்கடிக்க முடியாமல் போயுள்ளது.
உண்மையான விடுதலைப்புலிகள் வடக்கில் இல்லை. சர்வதேசத்திலே இருக்கின்றனர். அவர்கள் சொல்வதையே பிரபாகரன் இங்கு மேற்கொண்டார். ஆனால் எங்களால் சர்வதேசத்தை வெற்றிகொள்ள முடியவில்லை.
வடக்கில் யுத்தத்தின் மூலம் புலிகளை வெற்றிகொண்ட பின்னர் அங்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன, பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டன. ஆனாலும் தமிழ் மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்வதற்கு அன்று அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இருக்கவில்லை.
என்னதான் அபிவிருத்திகளை மேற்கொண்டாலும் மக்களின் உள்ளத்தை மாற்றுவது இலகுவான விடயமல்ல. அன்று மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு ஆலோசனை வழங்குபவர்களாக நாங்கள் இருந்திருந்தால் துட்டகைமுனு மன்னனின் முன்மாதிரியை பின்பற்றுமாறு தெரிவித்திருப்போம். அத்துடன் தேசிய ஒற்றுமையை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு நந்திக்கடலில் பிரபாகரனுக்காக நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதும் பிரச்சினை இல்லை.
ஏனெனில் மஹிந்த ராஜபக்ஷ் இங்குள்ள மக்களுக்கு வீரர்போன்று பிரபாகரன் தமிழ் மக்களுக்கு வீரராவார். சரியோ பிழையோ அதுதான் உண்மை. யுத்த வெற்றி விழாக்களை கொண்டாடவேண்டும். நாட்டின் அடையாளத்தை பாதுகாத்துக்கொண்டு அந்த மக்களின் உரிமையையும் பாதுகாக்கவேண்டும் என்றார்.
இனத்தால் வேறுபட்டாலும், குணத்தால் ஒற்றுமைப்படும் இருவரில், ஒருவர் மற்றவரை பற்றி புகழ்ந்து பேசுவதில் என்னதான் அதிசயம் இருக்கிறது.
ReplyDeleteஎப்படி இருந்தாலும், ஜனாசார குசு இட்டாலும் அதை செய்தியாக பிரசுரித்து அவனை பிரபல்லியம் அடைய செய்வதில் நமது ஊடகங்களின் பங்களிப்பு அளப்பெரியது.
வாழ்க தமிழ் ஊடகங்களே.....
ஞானசேர தேர்ரின் policy "எதிரிக்கு-எதிரி நண்பன்" என்பது போல.
Deleteஞானசேர தேரரே, நீங்கள் வட-கிழக்கை இணைக்க ஒத்துழையுங்கள், பார்கலாம்.
DeleteDeal?
எதிரிக்கு எதிரி நண்பன்தான், ஆனாலும் நீங்க இருவரும் எப்பவுமே எதிரிகள்தான்...
Deleteஎதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள். மொழியால் ஒன்று பட்டாலும் மதத்தால் ஈரினங்கள்.தமிழர்களை ஒரு கையில் பார்த்து விட்டோம்.அப்பொழுது முஸ்லிம்கள் நல்லவர்கள். இப்பொழுது முஸ்லிம்களை ஒரு கையில் பார்த்து விட்டு கடைசியில் ஈரினங்களையும் வேரோடும் வேரடிமண்ணோடும் இல்லாதொழிப்போம்.இதை ஈரினத்தவர்களும் சம காலத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
ReplyDeleteYes you are right, otherone is Batticaloa Sumangala thero
DeleteNow they are pretending like Tamil supporters. These ppl have to be eliminated from this society.
Muslins also shoyld realize the way the govt hace treated the Tamis in past & present.
There is no point closing the eyes and support whatever the majority says.
All the ethnic and religion ezpress the same justice. So we don't need to wait till it happened to us,even if there is any violence we have to give tge justice and ww hv to be neutral.
All the community should realize that whatever we do,the same will haplen to us also
ஞானத்திற்கு ஞானம் பிறந்திடுச்சுடோய்
ReplyDeleteநீ இன்னும் இங்கதான் இருக்கியா?
ReplyDeleteசொல்லவே இல்ல.இரிடா...என் வெண்று..