Header Ads



மஹிந்த மீதான அச்சத்தினால் அந்த காலப்பகுதியில், ரோஹின்யர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை

அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டே தஞ்சம் கோரி இலங்கைக்கு வந்துள்ள ரோஹிங்யா மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிவில் அமைப்புக்கள் கோரியுள்ளன.

கொழும்பில் இன்று -29- இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சமூக செயற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாறிய அவர்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் 2008ஆம் ஆண்டு முதல் மியன்மார் அகதிகள் இலங்கைக்கு வந்து தஞ்சமடைந்தனர். அந்த காலப் பகுதியில் வந்த அகதிகளை வெளியேற்றுவதற்கு எந்தவொரு நபரும் முன்வரவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மீது கொண்டிருந்த அச்சத்தினாலேயே அந்த காலப்பகுதியில் அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

இதேவேளை, குறித்த பிக்குகள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என சமன் ரத்னபிரிய மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.