ராபிததுந் நளீமிய்யீனின், வருடாந்தப் பொதுக் கூட்டம்
ஜாமிஆ நளீமிய்யாவின் பழைய மாணவர்கள் சங்க அமைப்பான ராபிததுந்நளீமிய்யீனின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் “சமூக விவகாரங்களில் கூட்டுப் பங்களிப்பு” எனும் கருப்பொருளின் கீழ் எதிர்வரும்23ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் ஜாமிஆ நளீமிய்யா கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளதாகவும் ஜாமிஆ நளீமிய்யாவில் கற்ற பழைய மாணவர்கள் அனைவரும் சமுகமளிக்குமாறும் அதன் தலைவர்அஷ்ஷேய்க் வை.எல்.எம். நவவி தெரிவித்துள்ளார்.
கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக வைத்திய கலாநிதி ருவைஸ் ஹனீபாபங்கேற்கவுள்ளார்.
நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள்ராபிதாவின் பொது ச் செயலாளர் அஷ்ஷெய்க் ஜே.எம். ஜெஸார் (0777751737)அவர்களை தொடர்பு கொள்ளவும்.
Post a Comment