டெங்கு நோயினால், வைத்தியர் உயிரிழப்பு
கராப்பிட்டிய வைத்தியசாலையில் பெண் வைத்திய ஒருவர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஹபராதுவ, கினிகல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான வைத்தியர் எம். அனோமா ஜயவர்தன என்ற மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வைத்தியர் கடந்த 13 ஆம் திகதி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வைத்தியரின் மகளொருவரும் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த வைத்தியர் காலி, நுகதுவ பிரதேசத்தில் தனியார் சிகிச்சை நிலையமொன்றை நடத்திவந்திருந்த நிலையில் தினமொன்றில் பெரும்பகுதியை அவர் குறித்த சிகிச்சை நிலையத்தில் கழிப்பதால் அங்கிருக்கும் போதே அவருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவ்வைத்தியரின் கணவர் தெரிவித்துள்ளார்.
(ரெ.கிறிஷ்ணகாந்)
Post a Comment