Header Ads



தாடி வைக்க கூடாது, தொப்பி அணிய கூடாது - தெனியாய நகரில் மிரட்டல்

பேருவளயை சேர்ந்த முஸ்லிம் ஒருவர் தெனியாய நகரில் கடையொன்றை புதிதாக திறந்துள்ளார்.

இதனையடுத்து சிங்களவர்கள் சிலர் குறித்த கடைக்குவந்து ஒருவர் மணிபேர்ஸ் ஒன்றை வாங்கி சென்றுள்ளார்.

சிறிது நேரத்தின் பின் அந்த நபர் பிக்குகள் சிலருடனும் அடாவடி கும்பலுடனும் கடைக்கு வந்து தான் வாங்கி சென்ற 'மணிபேர்ஸில்'

'தர்ம சக்கரம்' பொதிக்கபட்டிருந்ததாகவும் அது பெளத்த மதத்தை அவமதிக்கும் செயலெனவும் கூறி பிரச்சினையை உருவாக்கியுள்ளார்

இதனால் அங்கு பதற்றம் ஏற்பட:டுள்ளது.

பின் பொலிசாரும் வரவழைக்கப்பட்டு குறித்த முஸ்லிம் கடை உடனடியாக மூடப்பட்டது.

கடை உரிமையாளரை பொலிசார் அழைத்து சென்று விசாரித்தபின் அது தர்மசக்கரமில்லை 'கப்பல்சக்கரம்' என்று உறுதியான பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் அப்பகுதிக்கு வந்த இனவாதக் கும்பல் முஸ்லிம்கள் சென்று இனிமேல் இங்கு யாரும் தொப்பி அணிய கூடாதென்றும், தாடி வைக்க கூடாதென்றும் மிரட்டல் விடுத்ததுடன் புதியவர்களை நகருக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறி சென்றுள்ளது.

1 comment:

  1. Why not tell Mr. Sagala Ratnayake about this incident - He is MP for Deniyaya and Law and Order mINISTER.

    ReplyDelete

Powered by Blogger.