தேர்தல் முறையில் சிறுபான்மை மக்களுக்கு, அநீதி ஏற்படும் என்றால்..?
பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையுடன் சமர்ப்பிக்கப்பட்ட மாகாணசபை தேர்தல் தொடர்பான சட்டமூலத்தில் சிறிய கட்சி அல்லது பெரிய கட்சிகளுக்கு அநீதி ஏற்படுவதற்கு தான் இடமளிக்கப்போவதில்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முறையில் சிறுபான்மை அல்லது பெரும்பான்மை மக்களுக்கு அநீதி ஏற்படும் என்றால் அந்த சட்டமூலம் மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு திருத்தங்களை மேற்கொள்ளத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு மஹிந்த ராஜபக்ச சபையில் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment