கொழும்பில் O/L மாணவர்களுக்காக பயிற்சி வகுப்பு
கொழும்பிலுள்ள முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கான சந்திப்பு ஒன்று நேற்று தெமடகொட வீதியிலுள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றம் CDDF ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், மேல்மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் கபொத சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் புள்ளிகள் அடிப்படையில் சாதாரண தரத்தை எட்டாத மாணவர்களை இலக்காக வைத்து இந்த பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
கற்பித்தல் செயற்பாடுகளில் மிகவும் திறமையான ஆசிரியர்களின் மூலம் இந்த மாணவர்களுக்கு பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தை கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஆசிரியர் அப்துல் அஸீஸ் வடிவமைத்துள்ளார். மாதாந்தம் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய்கள் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக CDDF அமைப்பினால் செலவிடப்படுகிறது.
முஸ்லிம் பாடசாலை அதிபாகள் பலர் இந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக தமது கருத்துக்களை தெரிவித்ததோடு இந்த திட்டம் வெற்றி பெற தமது ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்தனர்.
CDDFன் கல்வி உபகுழு தலைவர் அல்ஹாஜ் இஸ்மத் CDDF நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Post a Comment