அவுஸ்திரேலியாவில் புர்காவை தடைசெய்ய முடியாதென பிரகடனம், புர்கா போட்ட எம்.பிக்கும் கண்டனம்
பர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என்ற பிரச்சாரத்திற்காக அவுஸ்திரேலிய செனட் அவைக்கு பெண் உறுப்பினர் ஒருவர் பர்கா அணிந்து வந்து அதை அவைக்குள்ளாகவே கழட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தீவிர வலதுசாரி உறுப்பினர் பௌலின் ஹான்சன். இவர் இஸ்லாமிய பெண்கள் உட்பட யாருமே பர்கா அணிந்து பொது இடத்திற்கு வரக்கூடாது. அது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இப்பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அவுஸ்திரேலிய செனட் அவைக்கு பர்கா அணிந்து வந்த அவர் செனட் அவைக்குள்ளாகவே அதை அவிழ்த்து உதறியிருக்கிறார்.
பின்னர் பேசிய அவர், இதை கழட்டி எரிவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், இது இந்த நாடாளுமன்ற அவைக்குள் இருக்கக்கூடாது என்று பேசியிருக்கிறார்.
பௌலின் இந்த நடவடிக்கையால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பேசிய அவுஸ்திரேலிய அட்டார்னி ஜென்ரல் ஜோர்ஜ் ப்ராண்டிஸ், பர்கா அணிவது அவுஸ்திரேலியாவில் தடை செய்யப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு சமுதாயத்தை துன்புறுத்த, ஒரு சமுதாயத்தை மூலையில் கொண்டு நிறுத்த, அதன் மத நம்பிக்கைகளை கேலிக்குரியதாக்க பௌலின் இப்படி செய்ததாக கூறி பெண் உறுப்பினரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டார்.
Her name is Pauline Hanson.
ReplyDelete