'ஆவா' வை வேட்டையாடுவதில், லதீப் தீவிரம்
கொக்குவிலில் நேற்றுக்காலை சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன், ஆவா குழுவின் துணைத் தலைவராகச் செயற்பட்டவர் என்று காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொக்குவில் பகுதியில் நேற்று அதிகாலை உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது, ரவீந்திரன் தருசன் என்ற இளைஞனை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்திருந்தனர்.
அவர் யாழ். காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், கொக்குவிலில் கடந்த மாத இறுதியில் காவல்துறையினர் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் மற்றும் ஆவா குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் இவர் பங்கெடுத்திருந்தார் என்று தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தருசன், தனது சகாக்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, வேறொரு இடத்துக்குத் தப்பிச் சென்றிருந்தார். நேற்று அதிகாலை இவர் கொக்குவில் பகுதியில் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார்.
கொக்குவில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குழுவின் தலைவரான நிசா விக்டர் உள்ளிட்ட எட்டுபேர், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி லதீப்பின் நெரடி கண்காணிப்பின் கீழ், சிறப்பு குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Good
ReplyDelete