Header Ads



வசீம் கொலையில், பச்சையாக பொய்சொன்ன ஷிரந்தி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டார். விசாரணையின் பின் வாக்கு மூலத்தை பதிவு செய்த பொலிஸார் அதனை படித்துப் பார்த்து கையொப்பமிட ஷிரந்தியிடம் கோரியுள்ளனர். இதன் போது தனக்கு சிங்களம் வாசிக்கத் தெரியாது என ஷிரந்தி தெரிவித்துள்ளார்.

வஸீம் தாஜுதீன் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிரிலிய சவிய எனும் அமைப்பின் கீழ் இருந்த டிபண்டர் வண்டி தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.

விசாரணையின் போது விசாரணை அறைக்குள் ஷிரந்தியுடன் உடன் சென்ற மஹிந்த, சட்டத்தரணி ஜயந்த, தொலவத்த உளிட்ட எவரும் அனுமதிக்கப்படவில்லை. 

இந் நிலையில் விசாரணையின் பின் வாக்கு மூலத்தை பதிவு செய்த பொலிஸார் அதனை படித்துப் பார்த்து கையொப்பமிட ஷிரந்தியிடம் கோரியுள்ளனர். இதன் போது தனக்கு சிங்களம் வாசிக்கத் தெரியாது என ஷிரந்தி கூறியுள்ளார்.

பதுளையில் பிறந்த ஷிரந்தி, சிங்களத்தை திடீரென மறந்தமை முழு குற்றப் புலனாய்வுப் பிரிவிலும் பிரபலமாக பேசப்படுகின்றது.

சிங்களம் தெரியாது என ஷிரந்தி கூறியதை தொடர்ந்து விசாரணை அறைக்கு வெளியில் இருந்த சட்டத்தரணி ஜயந்த வீரசிங்கவை அழைத்த புலனாய்வுப் பிரிவு அவர் ஊடாக வாக்கு மூலத்தை வாசித்துக் காட்டியுள்ளது. 

எனினும் சட்டத்தரணி கோரும் திருத்தங்களுக்கு அங்கு வாய்ப்பில்லாமல் போயுள்ளது. ஏனெனில் விசாரணை முழுதையும் புலனாய்வுப் பிரிவு ஒலிப் பதிவு செய்துள்ளதால் ஷிரந்தி தரப்புக்கு ஏற்றாற்போல் வாக்கு மூலத்தை மாற்றிக்கொள்ள முடியாமல் போகவே, சி.ஐ.டி. பதிவு செய்த வாக்கு மூலத்தில் கையொப்பமிட்டு திரும்பியுள்ளார் ஷிரந்தி.

No comments

Powered by Blogger.