"விஜேதாச குறித்து, திங்கட்கிழமைக்குள் நல்ல தகவல் கிடைக்கும்" - அஜித்
அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நீதியமைச்சர் பதவியை வகிக்க தகுதியானவர் அல்ல என பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
நீதித்துறை சம்பந்தமாக கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் மனதில் இந்த ஒருவரால் நீதியமைச்சர் பதவியை வகிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே பிரதியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகள் துரிதமாக நடைபெற வேண்டும்.
மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கொன்றை விசாரித்து முடிக்க 10 ஆண்டுகளும் 2 மாதங்களும் செல்லும் என சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தாமதம் கூடாது.
இப்படி தாமதமான முறை சிறந்தது எனக் கூறும் அமைச்சர் ஒருவர் நீதியமைச்சர் பதவியை வகிக்க முடியாது. அந்த பதவியை வகிப்பது தார்மீகமானதல்ல.
முழு கட்சியும் தற்போது ஒருமித்த தீர்மானத்தில் உள்ளது.சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிலைப்பாட்டில் உள்ளனர். எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நல்ல தகவல் கிடைக்கும்.
நாங்கள் எமது போராட்டத்தை நிறுத்த மாட்டோம். இது ஒரு தனி நபருக்கு எதிராக மேற்கொள்ளும் போராட்டம் அல்ல. அத்துடன் அரசியல் பிரச்சினையும் அல்ல.
இது நாட்டின் நீதியை நிலை நாட்டும் செயற்பாடுகளை துரிதப்படும் சவால் மற்றும் பிரச்சினை.
தகுதியானவர்கள், நீதியை நிலைநாட்டும் நீதிமன்ற செயற்பாடுகள் உரிய முறையில் நடைபெற வேண்டும் என உணர்வு இருக்கும் நபர்கள் பதவிகளுக்கு நியமிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் நாங்கள் வெற்றிப்பெற வேண்டும் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment