Header Ads



மஹிந்தவுக்கு தவறுகளை சுட்டிக்காட்டிய SLTJ - அல்குர்ஆனை வழங்கி, வாசிக்குமாறும் அறிவுரை (படம்)


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்ஸவுக்கு சிங்கள மொழியிலான புனித அல்குஆர் பிரதியொன்றும் கையளிக்கப்பட்டுள்ளதுடன், சிங்கள சமூகத்தின் சில பகுதியினரால் அல்குர்ஆன் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி இக்குர்ஆனிலேயே பதில் கூறப்பட்டுள்ளது எனவும் அதனை வாசித்து அறிந்து கொள்ளும்படியும் அவரிடம் தவ்ஹீத் ஜமாத் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ரஸ்மின் மௌலவி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய தகவல் கீழ்வருமாறு,

மஹிந்தவை சந்தித்தோம். அவருடன் நேரடியாக முகத்திற்கு முகத்துடன் பேசினோம்.

மஹிந்த ராஜபக்ஸ் அவர்களே,

நீங்கள் முஸ்லிம்கள் விடயத்தில் தவறுகளை விட்டுள்ளீர்கள். இனவாதம் தலைவிரித்தாடியது. குறிப்பாக அலுத்கம விடயத்தில் பாரிய தவறு விட்டுள்ளீர்கள் என சுட்டிக்காட்டினோம்.

ஆம் நான், முஸ்லிம்கள் விவகாரத்தில் தவறு செய்துள்ளேன் என மஹிந்த ராஜபக்ஸ சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்தாகிய எங்களின் முன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

மேலும் அரசியலமைப்பு மாற்றம், முஸ்லிம் தனியார் சட்டம், அவற்றுக்கு எமது பதில்கள் என மஹிந்த ராஜபக்ஸவுடனான சந்திப்பு சூடுபிடித்திருந்தது எனவும் ரஸ்மின் மௌலவி தெரிவித்தார்.

அத்துடன் முன்னால் ஜனாதிபதியும், ஒருங்கிணைந்த எதிர் கட்சியின் முக்கியஸ்தருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் இஸ்லாம் பற்றிய நூல்களும், இஸ்லாம் பற்றிய மாற்றுமத நண்பர்களின் கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய வீடியோ தொகுப்பும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. MASHA ALLAH

    OUR DUTY TO PASS THE MESSAGE HIDAYATH FROM ALLAH GREAT JOB

    ReplyDelete
  2. இனவாதத்தில் குளிர்காய நினைத்த மகிந்த - இன்று தலைகுனிந்து நிற்கிறார்.

    இனவாதத்தில்தான் இனி எமது எதிர்காலம் என நினைக்கும் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இது ஒரு சமிக்ஜையாக இருக்கட்டும் - இது எதிர்காலத்துக்கல்ல எதிரகால தலைகுனிவுக்கான அடையாளம் என்று.

    ReplyDelete
  3. பாராட்டத் தக்கது.

    ReplyDelete
  4. Sltj try to joint to the political side . however funny games are it never sunny

    ReplyDelete
  5. Reward is for the intenation. May Allah reward them as per their intention.

    Ya Allah guide us in correct path and make us keep Tawakkalth on you alone.

    ReplyDelete
  6. இனி மீதாம் ஜனாதிபதியும் பிரதமரும்தான் அவர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் அல் குரான் கூடிய விரைவில் கைக்கு கிடைக்கும்.சிலவேளை அவர்கலி கேட்டு வாங்கி படிக்க வேண்டிய நிலை உருவாகலாம்

    ReplyDelete

Powered by Blogger.