அரசாங்கத்துக்குள் SLFP இருப்பது 'யானை விழுங்கிய விளாம்பழம்' போன்றது
அரசாங்கத்துக்குள் இருக்கும் நெருக்கடி நிலைமையை மறைக்க வெவ்வேறு விதமான பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இன்றைய தினம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,
இந்த அரசாங்கத்தின் நிதி தொடர்பான தீர்மானங்கள் அர்ஜுன் மஹேந்திரனினால் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த அரசாங்கத்தின் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானம் நெவில் பெர்னாண்டோவினால் எடுக்கப்படுகின்றது.
இந்நாட்டின் நீதி நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுப்பது ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணைக்குழு செயலாளர் ஹுசேன் இளவரசர்.
இந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானத்தை முன்னெடுப்பது புலம்பெயர் புலி ஆதரவாளர்கள்.
இந்த அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வெளியேறுவதற்கு இன்னும் காலம் எடுக்க வேண்டாம்.
ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் டிசம்பர் வரை இருக்க வேண்டியதில்லை. செப்டம்பர் 2 உடன் வெளியே வரவும். இது ஐ.தே.க.யின் அரசாங்கம்.
இந்த அரசாங்கத்துக்குள் ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் தொடர்ந்தும் இருந்தால், யானை விழுங்கிய விளாம்பழம் போன்றுதான் இருப்பார்கள்.
இதேவேளை, அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பலம் இன்னும் இரு வாரங்களில் இழக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment