SLFP உறுப்பினர்கள் வெளியேறினாலும், கூட்டு ஆட்சி தொடரும், 3 வருடம் அரசாங்கத்தை நீடிக்கத் திட்டம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வெளியேறினாலும் கூட்டு ஆட்சி தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள் சிலர் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால், எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு புதிய அரசாங்கமொன்றை அமைத்து முன்னோக்கி நகர்த்த சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் திட்டமிட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இணைத்துக் கொண்டு எதிர்வரும் மூன்றாண்டு காலம் வரையில் தொடர்ந்தும் அரசாங்கத்தை நீடித்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஜனாதிபதியினதும் பிரதமரினதும் நோக்கமாக காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment