IS அச்சுறுத்தல் செய்தி - விசாரணைக்கு பிரதமர் உத்தரவு
கொழும்பிற்கான அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய -05- தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது,
அமெரிக்கத் தூதரக தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வார இறுதி செய்தித்தாள் ஒன்றில் அமெரிக்கத் தூதரகம் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த செய்தி தொடர்பிலான தகவல்கள் தம்மிடம் இருப்பதாக குறித்த செய்தித்தாள் நிறுவனம் கூறுகின்றது. எனினும் அவ்வாறான எவ்வித விடயங்களும் தெரியாது என கொழும்பிற்கான அமெரிக்கத் தூதரகம் தொரிவித்துள்ளது.
ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு நான் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
இவ்வாறான அச்சுறுத்தல் காணப்பட்டால் அமெரிக்கத் தூதரகத்தை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் சிறிய ரக விமானம் ஒன்றை கடத்தி அதன் ஊடாக கொழும்பிற்கான அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வார இறுதி செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment