Header Ads



விஜித தேரர் IS தீவிரவாதிகளால் கொல்லப்படுவார் - பொது­ ப­ல­சேனா

-ARA.Fareel + விடிவெள்ளி-

முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களின் அர­வ­ணைப்பில் வட்­ட­ரக்க விஜித தேரர் இருக்­கிறார். அவரை முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் பயன்­ப­டுத்திக் கொள்­கி­றார்கள்.

வட்­ட­ரக்க விஜித தேரர் எங்­கா­வது ஓரி­டத்தில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் தாக்­கு­தல்­க­ளி­னாலே உயி­ரி­ழப்பார் என பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே தெரி­வித்தார்.

ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சே­னாவின் உத்­தி­யோ­க­பூர்வ காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர்­தொ­டர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்,

‘அஸ்­கி­ரிய பீடம் அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்க தேரரின் கையொப்­பத்­துடன் பிர­க­டனம் ஒன்­றினை வெளி­யிட்­டுள்­ளது. அப்­பி­ர­க­ட­னத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தில் தேர்தல் முறை­மையில் திருத்­தங்­களை மாத்­திரம் அங்­கீ­க­ரிப்­ப­தா­கவும் வேறு திருத்­தங்கள் தேவை­யில்லை எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் இஸ்­லா­மிய தீவி­ர­வாதம், புதை­பொருள் அழிப்பு, வன பிர­தே­சங்கள் அப­க­ரிப்பு, தொல் பொருள் காணிகள் சுவீ­க­ரிப்பு, மத­மாற்றம் போன்­ற­வற்றை எதிர்த்­துள்­ள­துடன் தீர்­வு­க­ளையும் கோரி­யுள்­ளது. இந்தப் பிர­க­ட­னத்தை மூன்று தேரர்கள் மற்றும் வட்­ட­ரக்க விஜித தேரர் எதிர்த்­துள்­ளனர்.

ஞான­சார தேரர் தொடர்­பாக குரல் கொடுத்த விட­யங்­களை மகா­நா­யக்க தேரர்கள் ஏற்றுக் கொண்டு அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்துள்ள நிலையில் அதனை எதிர்க்கும் வட்டரக்க விஜித தேரர் நிச்சயம் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்படுவார் என்றார்.

No comments

Powered by Blogger.