விலகவுள்ள அமைச்சர்கள், ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்
தேசிய அரசாங்கத்தில் இருந்து அமைச்சர்கள் குழுவொன்று விகலவுள்ளதாக குறிப்பிட்டுள்ள நிலையில் தாம் விலகுவது குறித்து மறு பரிசீலனை செய்யவுள்ளதாகவும் பொது எதிரணியில் அமர்வதா அல்லது சுயாதீனமாக செயற்படுவதா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து இரண்டாவது தடவையாகும் ஜனாதிபதையுன் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய பிரதான கட்சிகள் இணைந்து கொண்டுசெல்லும் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று விலகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 18 பேர் தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறப்போவதாக கூறப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிடம் மீண்டும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் எதிர்க்கட்சி தரப்பில் அமரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment