பெண்ணின் வயிற்றைப் பிளந்து சத்திரசிகிச்சை செய்தபோது மின்தடை, போராடி உயிரைக் காப்பாற்றிய வைத்தியர்கள்
கம்பஹா, வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் பெண் ஒருவருக்கு சத்திரசிகிச்சை செய்து கொண்டிருந்தபோது திடீரென மின்சார துண்டிப்பு ஏற்பட்டிருந்தமையினால் நோயாளிக்கு ஏற்படவிருந்த பேராபத்தை வைத்தியர்கள் பெரும்போராட்டத்துக்கு மத்தியில் தடுத்தி ருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வத்துபிட்டிவல வைத்தியசாலையின் புதிய சத்திரசிகிச்சைக் கூடத்தில் நேற்றுமுன்தினம் காலை, பெண் ஒருவரின் வயிற்றில் சத்திரசிகிச்சை மேற்கொண்டிருந்தபோது இவ்வாறு மின்துண்டிப்பு ஏற்பட்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
மின்துண்டிப்பையடுத்து வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி இயந்திரத்தை செயற்படுத்தி உடனடியாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது துரதிஷ்டவசமாக மின்பிறப்பாக்கி இயங்காமல் போயுள்ளது.
இதன்போது சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 45 வயதான பெண்ணின் வயிறு பிளக்கப்பட்டு அவரது கர்ப்பப்பைபில் சத்திர சிகிச்சை இடம்பெற்றுக் கொண்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மீண்டும் மின் இணைப்பை ஏற்படுத்துவதற்கு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் ஆகியிருந்த நிலையில், அதுவரையில் வைத்தியர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியிருந்தனர்.
எனினும் மின்னிணைப்பு வழமைக்கு திரும்பும் வரையில் சத்திர சிகிச்சை நிபுணர்கள் அப்பெண்ணின் அருகிலேயே இருந்ததுடன், மின்சாரக் கோளாறு சீர்செய்யப்பட்டு மீண்டும் மின்னிணைப்பு ஏற்படுத்தப்பட்டதனையடுத்து சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.
இதேவேளை, மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து உடனடியாக மின்சார சபையுடன் தொடர்பு கொண்டு துரிதமாக வைத்தியசாலைக்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை களை முன்னெடுத்ததாக வத்துப்பிட் டிவல வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரி வித்துள்ளனர்.
Post a Comment