முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதால், பொதுபல சேனா என்னை கொலைசெய்ய முயற்சி
-ARA.Fareel-
ஜாதிக பலசேனாவின் செயலாளர் வட்டரக்க விஜித தேரர் பொதுபலசேனா அமைப்பின் தாக்குதல்களிலிருந்தும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வட்டரக்க விஜித தேரர் ஜ-னாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் செய்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கையொன்றினைப் பெற்றுக் கொண்டு ஒருவார காலத்தில் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்வதாக ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ரஜித கொடிதுவக்கு உறுதி வழங்கியுள்ளார்.
முஸ்லிம் சமூகத்தின் நியாயங்களுக்காக தான் குரல் கொடுப்பதால் பொதுபலசேனா அமைப்பு தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் எனவே தனக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
அத்தோடு மஹியங்கனை ஸ்ரீல.சு. கட்சியின் அமைப்பளராக நியமிக்கப்பட்டுள்ள நபர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் அவர் பொதுபலசேனாவின் செயற்பாட்டாளரென்றும் அவரை அப்பதவியிலிருந்து நீக்குமாறு கோரியுமே வட்டரக்க விஜித தேரர் பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதி ஆகியோருக்கு முறையிட்டிருந்தார்.
முறையிட்டு நீண்ட நாட்களாகியும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையிலேயே அவர் கடந்த புதன்கிழமை ஜனாதிபதியை நேரில் சந்திக்க ஜனாதிபதியின் செயலகத்துக்குச் சென்றிருந்தார். அச்சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரினால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment