பேஸ்புக்கினால் பாதிக்கப்படும் பெண்கள் - வந்துகுவியும் முறைப்பாடுகள்
முகநூல் தொடர்பில் ஆறு மாத காலத்தில் 1600 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதம தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் முகநூல் தொடர்பில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிகளவான முறைப்பாடுகளை பெண்களே மேற்கொண்டுள்ளனர் எனவும் சுமார் 60 வீதமான முறைப்பாடுகள் பெண்களினால் செய்யப்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலியான முகநூல் கணக்குகளை திறத்தல் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, பேஸ்புக் தொடர்பில் 0112-691692 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் ரொசான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment