தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள், அங்கிருந்து வெளியேற பொது மன்னிப்பு
சட்டவிரோதமாக தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள், அங்கிருந்து வௌியேற, பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி வரை இந்த கால எல்லை அறிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தாயகம் திரும்புபவர்களுக்கு, இலங்கையிலுள்ள சட்ட திட்டங்களாலும் எந்தப் பிரச்சினையும் ஏற்படுத்தாதிருக்க முடிவு செய்துள்ளதாகவும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இக் காலத்தை சரியாக பயன்படுத்தாது தொடர்ந்தும் தென் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் தலதா அதுகோரல குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment