Header Ads



பிரதமர் ரணில், முஸ்லிம்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்

அலுத்கமை தர்கா நகர் மக்களிடம் இப்திகார் ஜமீலும்  இலங்கை முஸ்லிம்களிடம் பிரதமரும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த பகிரங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அவரது ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

05-07-2017ம் திகதி பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  மரைக்கார் எழுப்பிய வினாவுக்கு பதில் அளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை முஸ்லிம்கள் தங்களுக்கு நீதி வேண்டும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் அளுத்கமை கலவரத்துக்கு நீதியும் உரிய நஷ்டஈடும் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் வழங்கப்பட்ட நஷ்டஈட்டை தவிர இதுவரை எந்த விதமான இழப்பீடுகளும் அந்த மக்களை சென்றடையவில்லை.இதன் காரணமாக பிரதமரின் இக் கூற்றை இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் பொய்யென மறுத்துள்ளதோடு மிகவும் பலமான கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பில் அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அப்போது தான் அதனை அறிந்ததுபோன்று கண் விழித்து அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.பிரதமர் அன்றைய இக் கூற்று அதன் பிறகாவது தீர்வுகிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திஇருந்த போதும் தற்போது கூறியுள்ள கூற்றானது அனைத்தையும் தவிடு பொடியாக்கியுள்ளது.

அண்மையில் இது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளர்கள் வினாஎழுப்பிய போது நழுவல் போக்கையே கையாண்டார்.அது போன்ற நழுவல் போக்கையாவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கையாண்டிருக்கலாம். பிரதமரின் இக் கூற்றின்மூலம் அளுத்கமை கலவரத்துக்கு முன்னாள் ஜனாதிபதி காலத்தில் வழங்கிய நிவாரணங்கள் மாத்திரம் போதுமானதாகும் என்பதே அவரது மனநிலையாகும்.

அன்று முன்னாள் ஜனாதிபதி குறித்த மக்களுக்கு சொத்துக்களுக்கான இழப்பீடுகளை வழங்கியதோடு இன்னும் இழப்பீடுகள் தொடர்பில் மதிப்பீடுகளையும் செய்துவைத்திருந்தார்.அளுத்கமை கலவரம் இடம்பெற்ற ஆறு மாத காலத்துக்குள் அவரதுஆட்சி கவிழ்க்கப்பட்டதால் அதனை அவரால் வழங்க முடியாது போனது. இவ்வரசுக்கு, அவ்இழப்பீடுகளை வழங்கும் கடமை பலகோணங்களில் உள்ள போதும் பிரதமரின் இக்கூற்றினூடாக இவ்வரசு காலத்தில் இதற்கான தீர்வு கிடைக்காது என்பது உறுதியான விடயம்.

முன்னாள் ஜனாதிபதி மதிப்பீடு செய்துவைத்திருந்த இழப்பீடுகளை கூட வழங்கும் எண்ணம் இவ்வட்சியாளர்களுக்கு இல்லை என்றால் முஸ்லிம்கள் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இவ்வாட்சியாளர்களை விட எந்தளவு கரிசனை கொண்டவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இது தொடர்பில் பலரும் பல வகையான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், இலங்கையில் உள்ள முஸ்லிம் கட்சிகள் மௌனமே காக்கின்றன. எது எவ்வாறு இருந்தபோதிலும் குறித்த பகுதி ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் இதனை எதிர்ப்பது காலத்தின்தேவை எனலாம். அந்த வகையில் இதனை எதிர்க்க வேண்டிய கடமை ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் இப்திகார் ஜெமீலுக்குள்ளது. அவர் இது தொடர்பில் தனது காட்டமான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

அத்தோடு அலுத்கமை தர்கா நகர் மக்களிடம் இப்திகார் ஜமீலும் இலங்கை முஸ்லிம்களிடம் பிரதமரும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனகளுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்பியல் நிஷாந்த பகிரங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
-- 

No comments

Powered by Blogger.