இறைச்சிக்காக மாடுகளை விற்கலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்து மாடுகளை இறைச்சிக்காக விற்கலாம் என்று உச்சநீதிமன்றம் இன்று 11.07.2017 அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த மே 23ம் தேதி மத்திய அரசு தடை அறிவிப்பை வெளியிட்ட உடனேயே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முதல்முறையாக இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர் சகோதரி செல்வ கோமதி ஆவார்.
இவர் சைவ பிரியர் என்றபோதிலும் மதச்சார்பற்ற நாட்டில் குறிப்பிட்ட உணவை உண்ணக்கூடாது எனக்கூற மத்திய அரசுக்கு அதிகாரமில்லை என்று இச்சகோதரி கூறினார்.அவரை தொடர்ந்நு ஆசிக் இலாஹி என்பவரும் வழக்கு தொடர்ந்தார்.
பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி மாட்டிறைச்சி தடைக்கு எதிராக இன்று வாதாடி வெற்றிவாகை சூடியுள்ளார்.
நீதியான தீர்ப்பை பெற்றுக்கொடுத்த கோமதி,ஆசிக் இலாஹி,கபில் சிபல்,ஜமாஅத்தார்கள்,இயக்கங்கள்,மாட்டிறைச்சி உரிமையாளர்கள்,அரசியல் அமைப்புக்கள் அனைவரையும் இந்த தினத்தில் நன்றியோடு நினைவுகூர்வோம்.
Post a Comment