'மோசடி செய்த பணத்தை, என்ன செய்தேன் என மறந்து விட்டேன்' கம்மன்பில
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அவுஸ்திரேலிய பிரஜையான பிரயன் ஷெடிக் என்பவருக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்களை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த குற்றச்சாட்டு பொய்யானது என ஊடகவியலாளர் சந்திப்புகளில் கூறி வந்த கம்மன்பில, அண்மையில் உயர்நீதிமன்றத்திடம் கையளித்த சத்தியக்கடிதத்தில் தான் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
உதய கம்மன்பில மாத்திரமல்லாது, அவரது நண்பரான சிட்னி ஜயசிங்க வழங்கிய சத்தியக்கடிதத்திலும் பிரயன் ஷெடிக்கின் சொத்துக்களை விற்று மில்லியன் கணக்கான பணத்தை பெற்றுக்கொண்டதாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் அந்த பணத்தை என்ன செய்தார்கள் என்பதை தாம் மறந்து விட்டதாக இருவரும் கூறியுள்ளனர். இந்த மறதி என்பது சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்துச் செல்ல புனைப்பட்ட பொய் என சட்டவாதிகள் கூறியுள்ளனர்.
மில்லியன் கணக்கான டொலர்கள் செலவானதை மறந்து போனார்கள் என்பது கேலிக்குரியது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவுஸ்திரேலிய பிரஜைக்கு சொந்தமான தனியார் வங்கி ஒன்றில் இருந்த 2.1 மில்லியன் டொலர் பங்குகளை போலியான சட்டப்பத்திரம் ஒன்றை தயாரித்து விற்பனை செய்துள்ளதாக கம்மன்பிலவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கம்மன்பில உயர்நீதிமன்றத்தில் வழங்கிய சத்தியக்கடிதத்தில் வங்கியில் இருந்த அந்த பங்குகளை பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவுக்கு விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
Post a Comment