Header Ads



"சேவையில் இருக்கும் போது, கைது செய்யப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி இவரே"

நீண்ட நேர விசாரணைகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட, காவல்துறையின் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க நாளை, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கொலை மற்றும் வல்லுறவு வழக்கில் சந்தேக நபர் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க உதவினார், நீதி வழங்கப்படுவதற்கு இடையூறாக இருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே லலித் ஜெயசிங்க நேற்று கைது செய்யப்பட்டார்.

தற்போது, மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பாக இருக்கும் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தலைமையகத்துக்கு நேற்று அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதையடுத்தே, அவர் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது, குற்றவியல் சட்டத்தின் 209ஆவது பிரிவின் கீழ், பிரதான சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்து, மறைந்திருப்பதற்கு உதவினார் என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சேவையில் இருக்கும் போது கைது செய்யப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி இவரே என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

விசாரணையின் போது, இவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். எனினும், இது தொடர்பான உறுதியான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.