யாழ்ப்பாணம் கதீஜா பெண்கள், கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்
-பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் கதீஜா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (19) நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் மற்றும் இந்தியத் துணைத் தூதுவர் சீறீமன் ஆ.நடராஜா கலந்து கொண்டு புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
இதன்போது வடக்கு மாகாணசபையின் வடக்கு மாகாணசபை உறுப்பினரான அஸ்மின் அய்யூப் இமானுவல் ஆர்னோல்ட் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் கதீஜா பெண்கள் கல்லூரி அதிபர் ஜன்ஸி கபூர், ஜம்இய்யதுல் உலமா யாழ் கிளிநொச்சி மாவட்டக் கிளை தலைவர் மௌலவி அப்துல் அஸீஸ்(காசிமி) இஸ்லாமிய வழிகாட்டல் மத்திய நிலைய தலைவர் அஷ்-ஷெய்க் எம்.அலியார் பைசர் (மதனி) உள்ளிட்ட யாழ் முஸ்லிம் சிவில் சமூகப்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் கதீஜா பெண்கள் கல்லூரியின் மீள் நிர்மானப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் முதற்கட்டமாக மூன்று ஆசிரிய விடுதிகளும் மலசலகூட வசதிகளும் தற்போது நிர்மாணிக்கப்பட்டு அதன் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றது.
அத்துடன் யாழ் மாவட்டத்தில் முஸ்லீம்கள் கடந்த காலங்களில் தமது கல்வி நடவடிக்கைக்காக ஒஸ்மானியா கல்லூரி மற்றும் கதீஜா பெண்கள் கல்லூரியை பயன்படுத்தி வந்தனர்.இவ்விரு பாடசாலைகளும் கடந்த கால யுத்தங்களினால் பாதிக்கப்பட்ட நிலையில் 2003 பின்னர் யாழ் ஒஸ்மானியா கல்லூரி முதலில் புனரமைப்பு செய்யப்பட்டதோடு தற்போது செயற்பட்டு வருகின்றது.
Post a Comment