தெற்காசிய நாடுகளுக்கு பொதுவிசா..?
தெற்காசிய எல்லைக்குள் விசா இன்றி விமான பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சார்க் எல்லை சட்டம் மற்றும் ஒழுங்கு உள்துறை அமைச்சர்களின் மாநாட்டு அமர்வுகள் நேற்று கொழும்பு, காலி முகத்திடல் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த அமர்வுகள் இடம்பெற்றுள்ளது.
எல்லை ரீதியில் முகம் கொடுக்கப்படும் பயங்கரவாத பிரச்சினை போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதம் கடத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக எல்லை என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் இங்கு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை தெற்காசிய எல்லைக்குள் பொது விசா அற்ற பயணங்களை அறிமுகப்படுத்தி வைப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
Post a Comment