Header Ads



எமிரேட்ஸ் + துருக்கிய விமானங்களில் லேப்டாப் தடைநீக்கம்

அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களில் லேப்டாப் எடுத்துச் செல்லக் கூடாது என்ற தடை எமிரேட்ஸ் மற்றும் துருக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு விலக்கப்பட்டது என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எட்டு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து வரும் மற்றும் அங்கு செல்லும் விமானங்களில் லேப்டாப் மற்றும் பிற பெரிய மின்னனு சாதனங்களை விமானத்தின் உள் எடுத்துச் செல்லக்கூடாது என மார்ச் மாதத்தில் அமெரிக்கா ஆணையிட்டது. அதில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் அந்த தடை விதிக்கப்பட்டது.

தனது துபாய் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவிற்கு விமானத்தை இயக்கும் எமிரேட்ஸ் நிறுவனம், புதிய பாதுகாப்பு விதிகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

தனது பயணிகள், லேப்டாப் எடுத்துச் செல்ல தற்போது அனுமதிக்கப்படுகின்றனர் என துருக்கிய விமானம் தெரிவித்துள்ளது.

ஞாயிறன்று அபு தாபியிலிருந்து வரும் `எடிஹாட்` விமானங்களுக்கு அந்த தடை நீங்கியதை தொடர்ந்து இந்த இரண்டு நிறுவனங்களும் அதன் வரிசையில் சேர்கிறது. எடிஹாட் நிறுவனம் கடுமையான சோதனைகளை மேற்கொள்வதாக அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்த பிறகு அந்த தடை நீக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.