Header Ads



ஞானசாரர் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பங்களை விளைவித்தது, மஹிந்தவின் சிங்கள செல்வாக்கை குறைப்பதற்கே

ஞானசார தேரர் அண்மையில் முஸ்லிம்கள் மத்தியில் குழப்பங்களை விளைவித்தமையானது மஹிந்த அணியின் சிங்கள மக்கள் செல்வாக்கை குறைக்கும் திட்டங்களில் ஒன்றாகுமென நாமல் ராஜபக்‌ச சுட்டிக்காட்டியுள்ளார்.

கிண்ணியா பிரதேச முஸ்லிம் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துள்ளது.

இதன்போது, அவரது புதல்வர் நாமல் ராஜபக்‌சவை சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

தற்போது எமக்கு சிங்கள மக்கள் செல்வாக்கு என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. சிங்கள மக்கள் ஆதரவு மாத்திரமல்ல முஸ்லிம்களின் செல்வாக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சிங்கள மக்கள் எமது பக்கம் திரும்பினால் தங்கள் வெற்றிகளை ஒரு போதும் தடுத்து நிறுத்த முடியாது. எமது கடந்த மே தின கூட்டத்து மக்கள் வெள்ளத்தை கண்டு இவ்வாட்சியாளர்கள் அஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

இதனை எவ்வாறு எதிர்கொள்வதென சிந்தித்த இவ்வாட்சியாளர்கள் ஞானசார தேரரை களமிறக்கினார்கள். நாம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையின வாக்குகளாலேயே தோற்கடிக்கப்பட்டிருந்தோம்.

எமது எதிர்கால தேர்தல் வெற்றி வியூகங்களானது சிறுபான்மை மக்களை மையப்படுத்தியதாக இருக்கும் என்பது இவ்வாட்சியாளர்களுக்கு நன்கு தெரியும்.

ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிரான குழப்பங்களை செய்யும் போது நாம் அதற்கு எதிராக கதைத்து முஸ்லிம் மக்களை எம் பக்கம் கவர முனைவோம்.

அதனை பூதாகரமாக்கி என்னிடமிருந்து பேரின மக்களை பிரிப்பதுவே இவர்களது சதியாக இருந்தது. இருந்த போதிலும் நாம் இவ்விடயங்களில் எப்படி முஸ்லிம்கள் பக்கம் நின்று செயற்பட முடியுமோ அப்படி செயற்பட்டேன்.

பேரின மக்கள் இவர்கள் நினைக்குமளவு மடையர்களல்ல. அவர்களும் இவர்களது உள்நோக்கங்களை புரிந்து கொண்டு செயற்பட்டார்கள். முஸ்லிம் ஆட்சியாளர்கள் அனைவரும் எம்முடன் தானே இருக்கின்றார்கள்.

இவர்களை பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் தான் இத்தனையும் செய்தார்கள். இறுதியில் இவர்கள் மீது முஸ்லிம் மக்கள் பாயத் தொடங்கினர். இதனை இவ்வாட்சியாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கவில்லை.

இவர்கள் எதிர்பார்த்தது போன்று பேரின மக்கள் இவர்களின் திட்டங்களுக்குள் அகப்படவில்லை. அதேநேரம் கடந்த தேர்தல் வெற்றியில் பிரதான பங்கு வகித்த முஸ்லிம்களினது வாக்குகளும் இவர்களை விட்டும் சென்றன.

தற்போது இவர்களின் நிலை அரசனுமில்லை, புருசனுமில்லை என்பதாகும். இவர்கள் எங்களது ஆட்சியை கவிழ்க்க கையாண்ட குறுக்கு வழிகள் எதுவும் இன்று அவர்களுக்கு எடுபடவில்லை.

அந்த குறுக்கு வழிகளில் ஒன்றுதான் இந்தஞானசார தேரரரின் இரண்டாவது மிஷன். அவர்களது இந்த மிஷன் தற்போது தோல்வியில் முடிந்துள்ளது.

குறுக்கு வழிகள் மிக நீண்ட காலம் நிலைக்காது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும் என நாமல் ராஜபக்‌ச குறிப்பிட்டார்.

1 comment:

  1. No sense here. Namal long way to go in politics. 2 wrongs will not make 1 right

    ReplyDelete

Powered by Blogger.