Header Ads



முஸ்லிம் குடியேற்றப் பகுதிக்கு, தமிழ் விஷமிகள் தீ வைப்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் புதிய முஸ்லிம் குடியேற்றம் அமைப்பதற்க்கென அடையாளப்படுத்தப்பட்ட வனப்பகுதிக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (19) இரவு நடைபெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.  

குறித்த பகுதியில் வனங்களை அழித்து புதிய முஸ்லிம் குடியேற்றம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் இளைஞர்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்பாட்டத்தினை குறித்த பகுதியில் மேற்கொண்டிருந்தனர்.அதாவது நேர்த்தியாக உருவாக்கப்பட்ட வனங்கள் நிறைந்த குறித்த பிரதேசம் இந்த திட்டமிட்ட குடியேற்றம் அமைக்கப்படுவதால் அழிந்துபோகும் அபாயத்துக்குள்ளாகும் எனவும் இயற்கை இருப்பை இல்லாதொழிக்கும்   நடவடிக்கையில் எவர் ஈடுபட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கையினை முன்வைத்து ஆர்பாட்டத்தினை  மேற்கொண்டிருந்தனர்.

அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று சில நாட்களே ஆன நிலையில்  குறித்த பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான தேக்குமர கன்றுகள் நடப்படுள்ள பிரதேசம் விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது .இந்த தீ வைப்பால் 10 ஏக்கருக்கு மேற்பட்ட வனங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.இது திட்டமிட்டு சில விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருக்குமென பிரதேச மக்கள் ஆத்திரம் வெளியிட்டனர். 

5 comments:

  1. இவ்வளவு தூரம் நடப்பதற்கு வித்திட்டவர்கள் விடுதலைப்புலிகல்தான் இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி தமிழ் மக்கள் அடுத்தவிடயம் சர்வதேசத்த்தில் புலிகலை
    பயங்கரவாதிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த ஒறுகூட்டம் இதை மலுங்கடிக்க ஒரு
    கூட்டம் அந்த கூட்டம்தான் இனவாத களத்தில் நிற்பவர்கள்.

    ReplyDelete
  2. இதை செய்துவிட்டு ரிஸாடின் மேல் பழி போட காத்திருக்கின்றது இந்த பாழாய் போன தமிழ் தீவிரவாதம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தானே.
      இவரை தவிர வேறு யார் இலங்கையில் காடழித்தல் செய்தார்கள் (யுத்த காலம் தவிர)?

      Delete
    2. அதென்ன யுத்தகாலம் தவிர?
      இன்று அழிக்க எத்தனிக்கும் ஏக்கர் கணக்கான முதிரை மரங்ள் தேக்கமரங்கள் திட்டமிட்டு யுத்தகாலத்தில் நடப்பட்டு வளர்க்கப்பட்டவை.

      Delete
  3. விடுதலைப்புலிகளால் 90ம் ஆண்டு இனசுத்திகரிப்பு செய்யப்பட்டு விரட்யடித்தார்கள் அதன்
    பிரகு முஸ்களின் வீடுகள் காணிகளை யுத்தத்தினால் உயிர் நீத்த மாவீர்ர்களுக்கு பகிந்தளித்தனர் யாருடையதை யாருக்கு யாரு பகிர்ந்தளிப்பது( ஊர்ரார் வீட்டு கோழியை அறுத்து ஒலையில் போட்ட கதைதான்)

    ReplyDelete

Powered by Blogger.