இலங்கை வந்த சவூதி இளவரசரை, முஸ்லிம் தலைவர்கள் சந்திக்காததன் காரணம் என்ன..?
-எம்எச்எம். இப்றாஹிம்-
சவூதியின் இளவரசர் அல் வலீத் பின் தலால் அப்துல் அஸீஸ் அவர்கள் 11 பேரடங்கிய தூதுக்குழுவுடன் இலங்கை வந்திருந்தார் அல்லவா ?
சவூதியின் இளவரசர் அல் வலீத் பின் தலால் அப்துல் அஸீஸ் அவர்கள் 11 பேரடங்கிய தூதுக்குழுவுடன் இலங்கை வந்திருந்தார் அல்லவா ?
அவர் ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு அமைச்சர்கள் உட்பட பலபேரை சந்தித்திருந்தார், ஆனால் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையோ, முஸ்லிம் கட்சி தலைவர்களையோ சவூதி இளவரசர் சந்தித்தாக காண முடியவில்லை.
இந்த சந்திப்பில் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களாவது சந்திக்காமல் போனதன் மர்மம் என்ன ?
நல்லாட்சி அரசாங்கம் சவூதி இளவரசரை முஸ்லிம் பிரமுகர்களை சந்திக்க ஏற்பாடுகளை செய்யாமல் விட்டதன் காரணம் என்ன ?
கடந்த சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்திலும், மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலும் சவூதியின் முக்கியஸ்தர்கள் பலபேர் வந்தபோதெல்லாம் இலங்கையில்லுள்ள முஸ்லிம் தலைவர்களையும், இதர முக்கியஸ்தர்களையும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
அதன் காரணமாக சுனாமி அனர்த்தத்தின் போதும் இதர அனர்த்தங்களின் போதும் சவூதி அரசாங்கம் பல பில்லியன் ரூபாய்களை நன்கொடையாக அள்ளிவழங்கிய நிகழ்வுகளையும் நாம் கண்டிருக்கின்றோம்.
ஆனால் இந்த அரசாங்கத்தில் மட்டும் சவூதி இளவரசரை எந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்ததாக அறியமுடியவில்லை.
உண்மையிலேயே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தேவையில்லாத சந்திப்பு என்று ஒதுக்கி தள்ளிவிட்டார்களா ? அல்லது இவர்கள் சந்தித்துவிடக்கூடாது என்று திட்டம்போட்டு தடுக்கப்பட்டார்களா ?
சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு செய்யும் உதவிகளை மூடிமறைப்பதற்காக அவருடை வரவை பெரிதுபடுத்தாமல் காதோடு காதுவைத்தாப்போல் மூடிய அறைக்குள் சவூதி இளவரசருக்கு பாராட்டு நடத்திவிட்டு, அவருடைய நாட்டுக்கு அவரை பக்குவமாக வழி அனுப்பிவைத்துள்ளது இந்த நல்லாட்சி அரசாங்கம்.
ஆகவே, இந்த சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியமான நாட்டின் இளவரசர் இலங்கைக்கு வந்துள்ளார், அவரை இலங்கை முஸ்லிம்கள் சந்தித்து தங்களுக்குள்ள பிரச்சினைகளை எடுத்துக்கூறி அதற்கான ஆதரவுகளையோ அல்லது அனுசரனைகளையோ பெறுவதில் நமது கட்சி தலைமைகள் ஏன் பின்னின்றார்களோ தெறியாது.
ஒருவேளை சந்தித்தால் ஞானசார கோபித்துவிடுவார் என்று பயந்துவிட்டார்களோ என்னமோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.
ஆகவே இந்த நல்லரசாங்கம் முஸ்லிம்கள் விடயத்திலும், முஸ்லிம் நாடுகள் விடயத்திலும் இனவாதமாகத்தான் சிந்திக்கின்றது என்பதை அவர்களின் இப்படியான நடவடிக்கை மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது என்பதே உண்மையாகும்.
Post a Comment