நாய்கள், மாடுகள் குறித்து பேசுவோர், விலங்குகளை காப்பாற்ற முன்வாருங்கள்
துப்பாக்கியை காட்டி, இராணுவத்தை பயன்படுத்தி குப்பை மேடுகளை மறைக்கவில்லை எனவும் மக்களுடன் இருந்து அரசாங்கம் இந்த பிரச்சினையை தீர்த்ததாகவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் விலங்கு பாதுகாவலர்களை போல் போலியாக நடிக்காமல், நேர்மையாக விலங்குகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
500 லட்சம் ரூபா செலவில் நகர அபிவிருத்தி அதிகார சபை நிர்மாணித்த வார சந்தையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அனைத்தையும் அரசாங்கம் தனித்து செய்ய முடியாது. குப்பையை வளமாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த பொறுப்பை ஜனாதிபதி கடந்த 5ம் திகதி எங்களிடம் ஒப்படைத்தார்.
அதனை பொறுப்புடன் ஏற்றுக்கொண்டோம்.இராணுவத்தினரையும் பொலிஸாரையும் இதில் ஈடுபடுத்தவில்லை. மூன்று நாட்களில் கொழும்பில் குவிந்த குப்பைகள் அகற்றப்பட்டன.
கொழும்பில் குவிந்து கிடந்த குப்பைகளை பல நிமிடங்கள், மணி நேரங்கள் ஒளிபரப்பிய ஊடங்கள் குப்பைகள் அகற்றப்பட்டதை காண்பிக்கவில்லை.
பத்திரிகைகள் அதனை எழுதவுமில்லை.கார்ட்டூன் வரைந்தவர்களுக்கு குப்பை அகற்றப்பட்டமை குறித்து கார்ட்டூன் வரைய மனம் வரவில்லை.
அனைத்து பிரச்சினைகளையும் படிப்படியாக தீர்க்கும் போது, ஆங்காங்கே அரசாங்கம் நாய்களையும் மாடுகளையும் விலங்குகளையும் கொல்வதாக குற்றம் சுமத்துகின்றனர்.
அன்று ஐஃபா நடத்தும் போது நாய்களை கொன்றனர். நாங்கள் அப்படி செய்ய மாட்டோம்.
நாய்கள் மாடுகள் குறித்து அனுதாபத்துடன் பேசுவோர், வீதிகளில் பொலித்தீன்களை சாப்பிடும் அப்பாவி விலங்குகளை காப்பாற்ற முன்வாருங்கள் என கோருகிறேன்.
முகநூலில், ஊடகங்களில் ஜீவ காருண்யவாதிகள் போல் நடிக்காமல் நேர்மையாக விலங்குகளாக குரல் கொடுத்து உள்ளூராட்சி அமைப்புகளின் வேலைத்திட்டங்களுக்கு உதவுங்கள் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment