புகையற்ற, புகையிலை பொருட்களுக்கும் தடை வந்தது
புகையற்ற புகையிலை பொருட்களின் உற்பத்தியை தடை செய்வதற்கு புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றிற்கு தேசிய அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
புகையிலை அடங்கிய புகையற்ற புகையிலை பொருட்களின் உற்பத்தி அல்லது கலவை அல்லது சிறு இனிப்புச் சுவையுடைய அல்லது நிறமுடைய புகையிலை அடங்கிய சிகரட் அல்லது புகையிலை அடங்கிய இலக்ட்ரிக் சிகரட் பேன்றன தயாரிப்பு, இறக்குமதி, விற்பனை மற்றும் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தல் என்பன தடை செய்யப்படுவதாக, தேசிய புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பான அதிகாரமுள்ளவர்களாக பொது சுகாதார பரிசோதகர்கள், உணவு பரிசோதகர்கள், கலால் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் செயற்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புகையற்ற புகையிலை பொருட்களின் உற்பத்திகளில் பெரும்பாலானவை புகையிலை மற்றும் பாக்கு என்பன அடங்கியவையே. இவை இரண்டும் அடங்கிய பொருட்கள் புற்று நோயை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார தாபனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment