என்னை கைதுசெய்ய முயற்சி - மகாநாயக்க தேரர்களிடம் கோத்தா முறைப்பாடு
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோல்வியடையச் செய்த யுத்தத்தை வழிநடத்திய ஒரே காரணத்திற்காகவே என்னை கைது செய்வதற்கு முயற்சிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கம் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய தினம் மகாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக யுத்தம் இடம்பெற்று வந்துள்ளது.
எனவே, குறித்த காலப்பகுதியில் நாட்டை ஆட்சி செய்த அனைத்து ஜனாதிபதிகளும் யுத்த குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும்.
நாட்டில் 30 ஆண்டுகளாக யுத்தம் இடம்பெற்ற நிலையில், குறித்த காலப்பகுதியில் நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகள் வழிநடத்தியிருந்தனர்.
இந்நிலையில், இறுதி யுத்தத்தை முன்னெடுத்து சென்றவர்கள் மாத்திரம் எவ்வாறு குற்றவாளிகளாக முடியும் என கோத்தபாய ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை, ராஜபக்சர்கள் உயிரை பணயம் வைத்து நாட்டைக் காப்பாற்றியவர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment