பாராளுமன்றத்தில் ரணில் சொன்ன, பொய்யைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன் - நாமல்
பிரதமரின் கூட்டு சதியில் பொதுபல சேனா உருவாக்கப்பட்டமையாலேயே அலுத்கமைக்கு நீதியையோ இழப்பீட்டையோ நல்லாட்சியில் பெற்றுக்கொடுக்க முடியாமல் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு அவரது ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் அலுத்கமை கலவரத்திற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா இழப்பீடு வழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பி இருந்த நிலையில் பாராளுமன்றத்தில் 05.07.2017 அன்று உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
அளுத்கம - தர்ஹாநகர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் சொத்து சேதங்களுக்கும் உரிய நட்டஈடுகள் வழங்கப்பட்டு. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.
இது தொடர்பில் அறிந்து கொண்ட நான் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானேன், ஆயிரம் நாட்கள் கடந்தும் அலுத்கமைக்கு நீதி கிடக்கவுக்கவில்லை இழப்பீடு கிடைக்கவில்லை இது ஏன் என அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன் பின்னரே விழித்தது பேல நடித்த பிரதமர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பதில் அளித்ததாக அறிந்தேன். இது தொடர்பில் நான் ஊடகங்கள் வாயிலாக கேள்வி எழுப்பி இருந்தேன்.
அலுத்கமைக்கு நீதியையும் இழப்பீட்டையும் இந்த அரசு பெற்றுக்கொடுக்கவில்லை என நாம் அனைவரும் அறிவோம்.எமது காலத்திலேயே விஷேட அதிரடிப்படை நிறுவப்பட்டது.சேதமான வீடுகள் வர்த்தக நிலையங்கள் புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டன.
அலுத்கமை விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பின், அங்கு நிலை நாட்டப்பட்ட நீதி தான் என்ன? அதன் சூத்திரதாரியாக இலங்கை மக்கள் அனைவரும் கருதி இருந்தவர் இன்று சுதந்திரமாகவே நடமாடுகிறார். சட்ட நடவடிக்கை எடுக்க அதன் சூத்திரதாரி அறியப்படல் வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற இக் கலவரத்தின் சூத்திரதாரி யார்?
அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய கோடிகளில் பணம் இதுக்கு இந்த அரசாங்கம் எமது அரசாங்கத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட இழப்பீடு செய்யப்பட்ட இழப்பீட்டையாவது இந்த அரசாங்கம் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment