Header Ads



பிள்ளைகளுக்கு ஸ்மார்ட், போன்கள் வழங்க வேண்டாம் - பொலிஸார் வேண்டுகோள்

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்க வேண்டாம் என சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் லங்கா ராஜினி தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

தற்போது பாடசாலை செல்லும் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும்.

பாடசாலை சென்ற பின்னரும், தனியார் வகுப்புக்களுக்கு சென்ற பின்னரும் அவர்கள் செய்யும் விடயங்கள், செல்லும் இடங்கள் தொடர்பில் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஸ்மார்ட் போன்களை பிள்ளைகள் பயன்படுத்துவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்று அதிகமான பாடசாலை மாணவ, மாணவியர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர்.

முகநூல் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்புக்களை பயன்படுத்துவதன் மூலம் பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான சம்பவங்களுக்கு பிள்ளைகளின் பெற்றோரே பொறுப்பு சொல்ல வேண்டும்.

பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ளக்கூட செல்லிடப்பேசிகள் வழியமைக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.