ஜனாதிபதி கேட்டால், எனது அமைச்சை கொடுக்கத் தயார் - சாகல
அழுத்தங்கள் இன்றி நான் சுயாதீனமாகவே சட்டம் ஒழுங்கு அமைச்சின் கடமைகளை முன்னெடுக்கின்றேன். ஜனாதிபதி என்னிடம் இருந்து அமைச்சைப் பொறுப்பேற்று வேறு அமைச்சுப் பொறுப்பில் என்னை கடமை செய்யுமாறு பணிப்பாரானால் அது தொடர்பில் எனக்கு ஆட்சேபணை இல்லை. அந்த அமைச்சிலும் இதே போன்று சிறப்பாக சேவைகளை முன்னெடுப்பேன் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற சார்க் நாடுகளின் சட்டம் ஒழுங்கு அமைச்சர்களின் கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக்வியலாளர் சந்திப்பில் கலந்துகொன்டு ஊடக்வியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அமைச்சரவை கூட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் காரசாரமாக விமர்சித்திருந்தார். குரிப்பாக ஊழல் ஒழிப்பு தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் சரியாக இடம்பெறவில்லை என ஜனாதிபதி குற்றம் சுமத்தி இருந்ததுடன் பொலிஸ் தினைக்களத்தை மூன்று மாதத்துக்கு தன்னிடம் ஒப்படைத்தால் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து காட்டுவதாகவும் கூறியிருந்தார்.
இது தொடர்பில் கேட்ட போதே இந்த பதிலை அளித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, அது தொடர்பில் மேலதிக கேள்விகளை கேட்க முற்பட்ட போது அதிலிருந்து நழுவி பிறிதொரு ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்வதாகவும் அதில் கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும் கூறிவிட்டு சென்ரார்.
Post a Comment