Header Ads



பாடசாலை பாடத்திட்டத்தில், பாலியல் கல்வி

தேசிய கல்வி கொள்கையை உருவாக்கும் போது பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி சம்பந்தமாக விசேட கவனத்தை செலுத்துமாறு அரச கணக்கீட்டு தெரிவுக்குழு தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

பாடசாலை பிள்ளைகளுக்கு பாடசாலை மற்றும் பாடசாலைக்கு வெளியில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் அவசியம் குறித்து தெரிவுக்குழு கவனம் செலுத்தி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் சம்பந்தமான விடயங்களை விளக்கும் மாற்று வழிகள் மாத்திரமல்லாது, பாடத்திட்டத்திலும் அதனை உள்ளடக்க வேண்டும்.

இது சம்பந்தமாக அரச கணக்கீட்டு தெரிவுக்குழு, தேசிய கல்வி ஆணைக்குழுவுடன் பல முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் விடயங்கள் சம்பந்தமாக தெளிவான அறிவு இல்லாத காரணத்தினால், மாணவர்கள் மற்றும் மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.