கோத்தபாயவை கைது செய்யலாம் - பொன்சேகா
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படுவதில் தவறுகள் ஏதும் இல்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு, களனி பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "ஊழல் மோசடி மற்றும் மனிதப் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படுவதில் தவறுகள் ஏதும் இல்லை. எனினும், பாதுகாப்பு தரப்புக்குள்ளும், ராஜபக்ச குழுவினரை பாதுகாக்கும் குழு ஒன்று உள்ளது.
முதலில் அவர்களை திருத்த வேண்டும். கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. அது தவறான விடயம் அல்ல.
ஊழல் மோசடி மற்றும் மனித படுகொலையுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட வேண்டும். அத்துடன் அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
இதனை பலரும் அரசியல் பழிவாங்கள் என கூறுவார்கள். எனினும், இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment