இராணுவ மறுசீரமைப்புக்கு, ஆசீர்வாதம் வழங்கிய ஜனாதிபதி
இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று, முதல் முறையாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இராணுவத்தில் செய்யப்படவுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
தேச கட்டுமானம், தேசிய நல்லிணக்கம், வேகமான சமூக மறுசீரமைப்பு மாற்றங்களுடன் தொடர்புடைய அபிவிருத்தி முயற்சிகள் மற்றும் தற்போதுள்ள கரிசனைகளைக் கருத்தில் கொண்டு, தேவையான நவீன தரத்துக்கு உயர்த்துவதற்கு சில கட்டமைப்பு மாற்றங்கள் இராணுவத்துக்குள் செய்ய வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தை மூன்று பங்குகளாக பிரித்து, மூன்றில் ஒரு பங்கை, போருக்குத் தயார் நிலையில் வைத்திருப்பதற்கும், இன்னொரு மூன்றில் ஒரு பங்கை தேச நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கும், மற்றொரு மூன்றில் ஒரு பங்கை இராணுவ நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கும் தாம் விருப்பம் கொண்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இராணுவ மறுசீரமைப்பு திட்டங்களுக்கு தனது ஆசீர்வாதத்தை அளித்துள்ளதுடன்,புதிய இராணுவத் தளபதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Post a Comment