தடுக்க முடியாமை வருத்தமளிக்கின்றது...!
போரில் மக்களை பாதுகாத்த போதிலும் டெங்கு நோயினால் மக்கள் மரணிப்பது கவலையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு கிழக்கில் நிலவிய கொடிய போரிலிருந்து மக்களை நான் மீட்டெடுத்தேன். எனினும் டெங்கு நோயினால் மக்கள் மரணிப்பதனை தடுக்க முடியாமை வருத்தமளிக்கின்றது.
டெங்கு நோய் நாடு முழுவதிலும் பரவிச் செல்கின்றது.
டெங்குவை கட்டுப்படுத்துவதற்கு அரசியல் பேதம் பாராட்டாது அனைத்துமட்ட மக்களும் இணைந்து முயற்சிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
நாட்டில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் என் மீது குற்றம் சுமத்தும் ஓர் கலாச்சாரம் உருவாகியுள்ளது.
டெங்கு நோய் தொடர்பான குற்றச்சாட்டும் எந்த நேரத்திலும் என் மீது சுமத்தப்படக் கூடும்.
அரசாங்கம் தொடர்ந்தும் பழிவாங்கல்களில் ஈடுபட்டு வருகின்றது. இதில் ஒர் முடிவினை காண முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இனியேனும் அரசாங்கம் செயற்திறனுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment