Header Ads



திருகோணமலை கடலில் நீலத் திமிங்கல போர்ப் பயிற்சி - எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயார்நிலை


சிறிலங்கா கடற்படையின் மரைன் பற்றாலியன், நீலத் திமிங்கலம்-3 என்ற போர்ப் பயிற்சியை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கடற்கரைப் பகுதியில்  நடத்தியுள்ளது.

ஈரூடகப் பயிற்சியுடன் இந்த நீலத் திமிங்கலம் -3 பயிற்சிகள் நேற்றுமுன்தினம் நிறைவடைந்தன.

சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவின் 2ஆவது பற்றாலியனைச் சேர்ந்த 159 படையினர் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.

கடல் , தரை வழியாக வரக் கூடிய எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதற்கேற்ற தயார் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில், சிறிலங்கா கடற்படையின் 821 ஆவது இலக்க தரையிறக்க கப்பல், 4 அதிவேகத் தாக்குதல் படகுகள், ஒரு அதிவேக பீரங்கிப் படகு, 8 கரையோர ரோந்துப் படகுகள், மற்றும் விமானப்படையின் ஒரு எவ்-7 போர் விமானம் மற்றும் எம்.ஐ-17 உலங்குவானூர்திகள் என்பன ஈடுபட்டன.

இந்தப் பயிற்சிகளை சிறிலங்கா கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நெறிப்படுத்தியிருந்தார்.


No comments

Powered by Blogger.