Header Ads



கணவர் பயணித்த ஆட்டோவை மறித்து, கொள்ளையிட்ட மனைவி

கட்­டு­நா­யக்க, கோவின்ன பிர­தே­சத்தில் தனது கணவர் பயணம் செய்த முச்­சக்­கர வண்­டியை வாகனம் ஒன்­றினால் இடை­ம­றித்து தாய் உட்­பட மேலும் சில­ருடன் சேர்ந்து  தனது கண­வனைத் தாக்கி அவ­ரது உடை­மை­களை கொள்­ளை­யிட்ட குற்­றச்­சாட்டில் பெண் ஒரு­வ­ரையும் அப்­பெண்ணின் தாயா­ரையும் கட்­டு­நா­யக்க பொலிஸார் கைது செய்­தனர்.

25 வய­தான  முறைப்­பாட்­டா­ள­ருக்கும் சந்­தேக நப­ருக்கும் இடையில் ஏற்­பட்ட பிரச்­சி­னையின் பின்னர் கட்­டு­நா­யக்க பொலிஸ் நிலை­யத்­துக்கு முறைப்­பாடு செய்ய முச்­சக்­கர வண்­டியில் வந்து கொண்­டி­ருந்­த­போது சந்­தேக நபர்கள் இரு­வரும் மேலும் சில­ருடன் வாக­னத்தில் வந்து முச்­சக்­கர வண்­டியை மறித்து முறைப்­பாட்­டா­ளரை தாக்கி முச்­சக்­கர வண்டி கைத்­தொ­லை­பேசி மற்றும் பணத்தை கொள்­ளை­யிட்­ட­தாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

 சந்­தேக நபர்­க­ளான பெண்கள் சட்­டத்தை கையி­லெடுத்து செயற்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸார் நீதி­மன்­றத்தில் தெரி­வித்­தனர்.

நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டா­ளரின் மனைவி மற்றும் மாமியார் ஆகி­யோரை தலா 50,000 ரூபா சரீரப் பிணையில் செல்ல அனு­ம­திக்­கும்­படி மினு­வாங்­கொடை நீதி­மன்ற நீதவான் சிலனி சத்­து­ரங்கி உத்­த­ர­விட்­ட­துடன், ஒக்டோபர் 9 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் நீதவான் சந்தேக நபர்களுக்கு உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.