அரசாங்கத்தின் பதில், போதுமானதாக இல்லை - அகில இலங்கை தேரர் ஒன்றியம்
மதம், தேசிய சகவாழ்வை பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், மாகாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு, அதன் விவரத்தை அறிவிக்குமாறு மாகாநாயக்க தேரர்கள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்தால் அளிக்கப்பட்டுள்ள பதில் போதுமானதாக இல்லையென்றும் அகில இலங்கை தேரர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இன, மத வேறுபாடுகள் தொடர்பில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுகோல்கள் இல்லை. ஆகையால், சுயாதீன ஆனைக்குழுவை அமைத்து உண்மையைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மாகாநாயக்க தேரர்கள், அரசாங்கத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒற்றையாட்சி, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ஆகியன தொடர்பில் அர்த்தபூர்வமான பதில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. அவையிரண்டும், ஏனைய பரிந்துரைகளின் ஊடாக அர்த்தப்படுத்தலாகாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டுக்குள் பௌத்தத்தைக் கட்டியெழுப்புவதற்கான சுற்றுச்சூழல் உருவாக்கப்பட வேண்டும். அதற்கேற்ப சட்டத்தை தயாரிக்க வேண்டும். அது மட்டுமன்றி, போதைப்பொருள் சட்டத்தில் மேற்கொள்ளவிருக்கின்ற திருத்தம் தொடர்பில் மக்களுக்கும் நாட்டுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். அவற்றில், ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்கள் ஏதாவது இருக்குமாயின், அவற்றை உடனடியாக நீக்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இனம் மற்றும் மதம் தொடர்பில் தங்களுடைய விருப்பத்தின் பிரகாரம் கட்சிகளோ அல்லது மக்கள் பிரதிநிதிகளோ கருத்துகளை வெளியிடும்போது, அது இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கும், முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கும் மற்றும் குழப்பங்களை உருவாக்குவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.
ஆகையால், இனம் மற்றும் மத விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கத்தால் எடுக்கப்படும் தீர்மானங்களை நாட்டுக்கு பொறுப்பானவர் என்ற வகையில், ஜனாதிபதி ஊடாகவே நாட்டுக்கும் மக்களுக்கும் அறிவிக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அகில இலங்கை தேரர் ஒன்றிணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment