Header Ads



பாவத்தை சுமக்க வேண்டிய நிலைமை, ஆடைகளை களைந்துவிட்டு வீதியில் செல்வது சிறந்தது - ஹரின்

உமா ஓயா திட்டத்தை மூடுமாறு கூறி வீதிகளில் கோஷமிட்டால் தான் ஒரு கோமாளியாக மாறும் நிலைமை உருவாகும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நவீனமயப்படுத்தப்பட்ட பதுளை வார சந்தையை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தொரிவிக்கையில்,

இவ்வாறு செய்வதை விட ஆடைகளை களைந்து விட்டு வீதியில் நடந்து செல்வது சிறந்தது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உமா ஓயா சம்பந்தமாக பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் நாங்கள் பிரச்சினையை கைவிட்டுள்ளதாக பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர்.

நாங்கள் செய்யாத பாவத்தை தோளில் சுமக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பிறர் செய்த பாவத்தை நாங்கள் அனுபவித்து வருகின்றோம். மக்களிடம் திட்டு வாங்குவதும் நாங்கள். இதுதான் அரசியல்.

நான் ஒரு அடிக்கல்லை கூட நடவில்லை. சுரங்கத்தை வெட்டுமாறும் கூறவில்லை. இது பற்றி எதுவும் எனக்கு தெரியாது. ஆனால் மக்கள் என்னை திட்டுகின்றனர். உலகம் இப்படித்தான். ஒன்று செய்ய முடியாது.

நாங்கள் செய்ய வேண்டியதை அரசாங்கத்திற்குள் செய்து வருகிறோம் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.