செம்மறி ஆடுகளின் இறக்குமதிக்கு, அமைச்சரவை அனுமதி
இலங்கையில் செம்மறி ஆடுகளை உற்பத்தி செய்யும் தொழிற்துறை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
முதற்கட்டமாக தேசிய மிருக வளங்கள் அபிவிருத்தி சபைக்கு செம்மறி ஆடுகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் பீ.ஹெரிசனால் இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, 25 ஆண் செம்மறி ஆடுகளும், 100 பெண் செம்மறி ஆடுகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
இதற்காக 2017 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதி பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment