முஸ்லிம்களின் உரிமையை மறுக்கும், தமிழ் பேரினவாதிகள்..!
வட மாகாணத்திலிருந்து பயங்கரவாத புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள குடியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை சில இனவாத தமிழ் அரசியல்வாதிகளும் இனவாத தமிழ் அமைப்புக்களும் எதிர்ப்பதை உலமா கட்சி கண்டிப்பதுடன் இத்தகைய இனவாத எதிர்ப்புகளுக்கெதிராக முஸ்லிம் இளைஞர் அமைப்புக்களும் அமைதிப்பேரணிகளை நடத்த வேண்டும் எனவும் உலமா கட்சி வேண்டிக்கொள்கிறது.
இது விடயமாக உலமா கட்சி தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடும்போது,
விடுதலைப்புலிகள் வட மாகாண முஸ்லிம்களிடமிருந்த அனைத்து சொத்துக்களையும் கொள்ளையடித்த பின்னர் பலாத்காரமாக வெளியேற்றியிருந்தனர். அம்மக்களின் காணி உறுதி பத்திரங்களைக்கூட பறிமுதல் செய்திருந்தனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரார்த்தனை காரணமாக, மஹிந்த ராஜபக்ஷ என்ற வீரத்தளபதி ஜனாதிபதியாகி புலிகளை ஒழித்துக்கட்டி முஸ்லிம்களுக்கு விடுதலை பெற்றுத்தந்தார். இதன் காரணமாக மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பும் தந்திரங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் முஸ்லிம்கள் மீண்டும் வடமாகாணத்திற்கு வர முடியாதபடி தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
டயஸ்போராக்களின் பணத்தின் மூலம் முஸ்லிம்கள் குடியேற காடுகள் அழிக்கப்படுகின்றன என்ற ஊடக பிரசாரம் முடுக்கி விடப்பட்டது. இதற்கு சில சிங்கள இனவாதிகளும் துணை போயினர்.
தற்போதுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஓரளவு முஸ்லிம்கள் தரப்பில் உள்ள நியாயங்களை உணர்ந்து முட்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு அனுமதியளித்து வருவதை பொறுக்க முடியாமல் மீண்டும் தமிழ் பேரினவாதிகள் முஸ்லிம்களின் குடியேற்றத்துக்கெதிராக குரல் எழுப்புகின்றனர்.
முஸ்லிம்களும் தமிழர்களும் தமிழ் மொழியை மட்டுமே பேசுகிறார்கள். முல்லைத்தீவில் வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்குத்தான் முயற்சி நடக்கிறதே தவிர சிங்கள தேசத்து முஸ்லிம்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு தம் மொழி பேசும் மக்களுக்கெதிராக இனவாத சிந்தனையில் இருப்பவர்களை நம்பி தமிழ் முஸ்லிம் ஒற்றுமைப்பட்டு வடக்கு கிழக்கை இணைக்க முன்வருவதே விமோசனத்துக்கு வழி என சில கிறுக்குகள் சொல்கின்றனர்.
ஆகவே வட மாகாண முஸ்லிம்களுக்கெதிரான இனவாத தமிழ் அரசியல்வாதிகளினதும் தமிழ் அமைப்புக்களினதும் தொடர் எதிர்ப்புக்களை தொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் மவுனமாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இத்தகைய இனவாதிகளுக்கெதிராக முஸ்லிம்களும் ஜனநாயக ரீதியாக களத்தில் இறங்கி அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மூலம் இனவாதுகளின் தடையையும் வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தின் அவசியத்தையும் வலியுறுத்த வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
Post a Comment